SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரவக்குறிச்சி பள்ளபட்டி மகான் ஷேக் அப்துல் காதிர் தர்காவில் சந்தனக்கூடு விழா

2018-07-04@ 15:04:05

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி மகான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில்  258ம் ஆண்டு சந்தனகூடு என்னும் உரூஸ் விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி மேற்கே ஈத்ஹா மைதானத்தில் அமைந்துள்ளது  மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்கா. இங்கு ஆண்டு தோறும் உரூஸ் விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன் பூக்கள் அலங்காரத்துடன் வாசக மாலை என்னும் ஊர்வலத்துடன் மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாவின் சந்தனகூடு என்னும் உரூஸ் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தர்காவில் மவ்லூது சரீப் ஓதி தப்ரூக் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் மற்றும் 3ம் நாள் அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

சந்தனக்கூடு தர்கா வளாகம் அமைந்துள்ள ஊரின் மேற்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெற்கு தெரு வழியாக சின்னக்கடை வீதி ஜம் ஜம் கார்னரில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தல் வந்தடைந்தது. அங்கு துஆ ஓதிய பிறகு அங்கிருந்து ஊர்வலமாக சென்று சொட்டல்  பெரிய கடை வீதி, புது சாயபு தெருக்கள் வழியாக சென்று உரூஸ் வளாகத்தில் உள்ள சந்தனக்கூடு அமைவிடமான தர்கா வளாகம் சென்றடைந்தது. விழாவை முன்னிட்டு தர்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளபட்டியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், டெல்லி, சூரத், மும்பை, நாசிக் உள்பட பல்வேறு வடமாநிலங்களிலும் பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும்  உரூஸ் விழாவின் போது செந்த ஊர் வருவது வழக்கம். இந்த ஆண்டும் பள்ளபட்டியை சேர்ந்த ஏராளமானவர்கள் உரூஸ் விழா கொண்டாட ஊருக்கு வந்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

  • Croatiaplayersreception

    குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்