SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்நடைகளுக்கு அருள்பாலிக்கும் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி

2018-07-04@ 09:32:34

நாகர்கோவில்  தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி  கோயில். இந்த கோவிலில் சீவலப்பேரி ஸ்ரீ சுடலை மாடசுவாமி, ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீபிரம்ம சக்தி, முண்டன் சுவாமி, புதிய சுவாமி, வீரமணி சுவாமி ஆகிய தெய்வங்கள் இருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இது தவிர பூக்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில் 3 சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் விவசாய பயன்பாட்டுக்காக மாடு வாங்குவதற்காக திருநெல்வேலிக்கு நடை பயணமாக சென்றனர். அப்போது தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஆற்றங்கரை அருகே வீற்றிருந்து அருள் பாலிக்கும் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியிடம், தாங்கள் மாடு வாங்க வந்ததாகவும், எங்களுக்கு நல்ல விதமான மாடு கிடைக்க வேண்டும் எனவும், அவ்வாறு கிடைத்தால் அனைவரும் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்து விட்டு செல்வதாகவும் வேண்டியுள்ளனர்.

சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியிடம் வேண்டி சென்றதால், அவர்களுக்கு சந்தையில் நல்ல விதமான மாடுகள் கிடைத்தது. இந்த சந்தோஷத்தில் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியிடம் வேண்டியதை மறந்து விட்டு மாடுகளுடன் மீண்டும்  நடை பயணமாக தோவாளை நோக்கி வந்தனர். இப்போது தோவாளையில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் கோயில் அருகே வரும் போது எட்டு பேரின் மாடுகளும் திடீரென மயங்கி விழுந்தது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். உடனே சிலர் அருகே உள்ள வைத்தியரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது மாட்டுக்கு எந்த வித நோயும் இல்லை எனவும், ஆனால் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் தெய்வ பிரசன்னம் பார்க்கின்ற சாமியாரை அழைத்து பார்த்தனர்.

அப்போது 8 பேரும் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு  சீவலப்பேரி சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறியதையும், ஆனால் அப்படி எந்த வித பூஜையும் செய்யாமல் மறந்து வந்ததும் தெரியவந்தது. உடனே தாங்கள் செய்த தவறை உணர்ந்து கொண்டனர். உடனே அங்கு சென்று பூஜை செய்ய போவதாக கூறினர். அப்போது சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி, பிரம்ம சக்தி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் தோன்றி நாங்கள் உங்களுடன் இங்கே வந்து விட்டதாகவும், மயானம் அருகே தங்களுக்கு  இருப்பிடம் போட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்ததாகவும், அதன்படி  மயானம் அருகே சுடலைக்கு இருப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டது. மேலும் மாடு மயங்கி விழுந்த இடமான இப்போது கோயில் இருக்கும் இடத்தில் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயில் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் மயானம் அருகிலும் சுடலைக்கு இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், கோயில் கொடை விழாவுக்கு முன்பு  மாயானத்தில் உள்ள சுடலை சுவாமிக்கு சிறப்பு பூஜை, மயானகுழியில் இளம் பன்றியை பலி கொடுத்த பிறகு கோவில் கொடை விழா நடக்கிறது. விழாவின் போது சுவாமி, யானையில் வீதி உலா வரும் போது பொது மக்களின் வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு அருள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குகின்றவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயிலுக்கு வந்து வேண்டி செல்வதாகவும், இதே போல்  வெளியூர்களில் இருந்து வானங்களில் வந்து சிறப்பு வழிபாடு செய்து  செல்வோர்களும் அதிகம் என்கின்றனர் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியின் பக்தர்கள்.

மாட்டு பொங்கலில் சிறப்பு அபிஷேகம்

இந்த கோவிலில் வெள்ளிகிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கலன்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2019

  20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்