SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளரிக்காய் அடை

2018-07-03@ 17:09:08

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் துருவல்  2 கப், பச்சரிசி  1 கப், துவரம்பருப்பு  1/2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  தலா 1/4 கப், காய்ந்தமிளகாய்  10, பெருங்காயத்தூள்   சிறிது, புளி, வெல்லம்  சிறிய நெல்லிக்காய் அளவு, சீரகம்  1 டீஸ்பூன், கடுகு  1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம்  1/4 கப், நறுக்கிய  மல்லித்தழை, கறிவேப்பிலை  சிறிது, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

எப்படிச் செய்வது?


அரிசி, பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி, பருப்பு, காய்ந்தமிளகாய், உப்பு, புளி, வெல்லம், சிறிது
தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, சீரகம், சின்னவெங்காயம்,  பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த மாவு கலவையில் கொட்டி கலக்கவும். அதே கடாயில் வெள்ளரித்துருவலை சிறிது வதக்கி அதே மாவுக் கலவையில்  கொட்டி கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து  முறுவலாக வந்ததும் எடுத்து காரச் சட்னியுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்