SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வனத்திருப்பதி கோயிலில் கருடசேவை

2018-07-03@ 15:22:37

திருச்செந்தூர்: வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி கருடவாகனத்தில் திருவீதி உலா நடந்தது. குரும்பூர் அருகே வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள், சிவனணைந்த பெருமாள் கோயிலில் 9வது வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு கோபூஜையை தொடர்ந்து விஸ்வரூபம் தரிசனம், பெருமானுக்கும், உற்சவருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 7மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து வருஷாபிஷேக விழா நடந்தது.

விழாவில் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் சுவாமி கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். விழாவில் ஆடிட்டர் சங்கரன், டாக்டர் ராஜா, கணபதி அய்யர், சிற்பிகணேசன், சிவாஜிராவ், செல்வராஜ், சுப்பிரமணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு சகஸ்நாம அர்ச்சனை, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சுவாமி ஸ்ரீநிவாசபெருமாள் கருடவாகன த்தில் திருவீதி உலா வந்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரா ராஜகோபால், அவரது மகன் சரவணன் மற்றும் கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்