SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாவவிமோசனம் நீக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்

2018-07-02@ 09:45:42

தேய்பிறையில் வரும் சதுர்த்திதிதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுசரிக்கப்படுகிறது. சதுர் என்றால் வடமொழியில் நான்காம் நாள் என்று பொருள். சதுர்த்தி பவுர்ணமியில் இருந்து நான்காம்நாளில் வரும். மாசியில் துவங்கி ஓராண்டு வரை இந்தநாட்களில் விரதம் மேற்கொண்டால் எல்லாத் துன்பங்களும் நீங்கும். பாவவிமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். பல்வேறு சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிகாலையில் நீராடி விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு மாலைவரை உணவருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

பின்பு மாலையில் அருகில் உள்ள விநாயகர்கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். முடியாதவர்கள் வீட்டில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். விநாயகர் ஒருமுறை ஆனந்தமாய் திருநடனம் செய்து கொண்டிருந்த போது சந்திரன் அங்கு வந்தார். பெருந்தொப்பையும், துதிக்கையுமாக அவர் ஆடுவதைப்பார்த்து கேலி செய்து சிரித்து விட்டார்.

இதனால் கோபமடைந்த விநாயகர் உனது கலைகள் தேய்ந்துபோகட்டும் என்று சாபம் கொடுத்தார். மனம்வருந்திய சந்திரன் சதுர்த்திதினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் சாபம்நீங்கினார் என்பது ஐதீகம். ஆவணி பவுர்ணமிக்குப்பின் வரும் சங்கடஹரசதுர்த்தி மகாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. சங்கரஹரசதுர்த்தியில் பலரும் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொள்வர். விநாயகர் கோயில்களிலும் இதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்