SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2018-06-28@ 14:41:53

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து கோயிலுக்கு கும்பாபிஷேம் நடத்த கொன்னையம்பட்டி சேர்ந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 24ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி என பல்வேறு பூஜைகளுடன் யாகசாலை பூஜை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாக பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அக்காண்டி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கொன்னையம்பட்டி சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர்  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். காரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்