SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

2018-06-28@ 14:41:24

ஆண்டிபட்டி: வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில், மாவூற்று வேலப்பர் கோயிலும் ஒன்றாகும். இங்குள்ள கோயிலில் பூசாரியாக “ பளியர் “ இனத்து மக்கள் பரம்பரையாக பூஜை செய்து வருகின்றனர். இங்கு ஜமீன் காலத்து சுயம்பு முருகன், மருது மரத்தின் வேரிலிருந்து வரும் ஊற்று நீரில் குளித்துவிட்டு முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற ஐதீகம் வழக்கத்தில் உள்ளது.

வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு மாவூற்று வேலப்பருக்கு நேற்று அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகனுக்கு சந்தனகாப்பு மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் அதிகாலையிலிருந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாவூற்று வேலவனை காண மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். ஆண்டிபட்டி பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை இந்து அறநிலை சமய நிலையத்துறை சார்பில் அருள் செல்வம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்