SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கம்பம் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

2018-06-28@ 14:40:06

கம்பம்: கம்பத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் மாசாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் மாசாண கருப்பசாமி கோயில் டிரஸ்ட் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதொடங்கப்பட்ட கோயில் திருப்பணிகள் நேற்று முன்தினம் முடிவுற்று அன்று மாலை யாகசாலை பூஜைகள் மற்றும் யாக வேள்விகள் நடைபெற்றது. சிறப்பு வேள்விகளை தொடர்ந்து விழாவில் நேற்று அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட, புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக மூலவர் கோபுரத்துக்கு கொண்டு செல்லும் கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, ஆறு மணியளவில் மாசாணகருப்பசாமி கோயிலில் மகாகும்பாபிஷேகமும், ஒன்பது மணியளவில் ஸ்ரீ.அங்காளம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கம்பம், கூடலூரைச் சேர்ந்த விஸ்வகர்ம வித்வாந்தரிஷி கோந்திரதாரர்கள், கொன்க்கி முல்லலுவாள்ளு பங்காளிகள் செய்திருந்திருந்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச்சேர்ந்த அனைத்து சமுதாயப் பெரியோர்கள், பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்