SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பேரையூரில் 12ம் நூற்றாண்டு கால கோயிலில் சிறப்பு பூஜை

2018-06-28@ 14:38:18

பேரையூர்: பேரையூரில் 12ம் நூற்றாண்டுகால பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற மல்லிகா அர்ஜூனா சிவலிங்க கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை பேரையூர் மொட்டமலையின் உச்சியில் 12ம் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜூனா சிவலிங்க கோயில் உள்ளது. அர்ஜூனன் வில்வித்தையை மொட்டைமலை உச்சியில் பயிற்சி பெற்றதாகவும், சதுரகிரி மகாலிங்கத்திற்கும் இங்குள்ள மல்லிகா அர்ஜூனா சிவலிங்கத்திற்கு ஒரே சக்தியும், தொடர்பும், இருப்பதாகவும், சதுரகிரிமகாலிங்கம் கோயில் மலை உச்சியில் ஏறமுடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் அதற்கு நிகரான பலன்களை பக்தர்கள் பெறலாம் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

பவுர்ணமி பூஜையை முன்னிட்டு நேற்று மலை உச்சியிலுள்ள மல்லிகா அர்ஜூனா சிவலிங்கத்திற்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் சிவலிங்கத்திற்கு ஏற்ற வில்வ இலைகள் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நெய்விளக்கில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் மல்லிகா அர்ஜூனா லிங்கசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்