SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வு பெறுவர்!

2018-06-28@ 13:03:36

அன்பின் மூலம் அன்பு வளர்வதைப்போல் வெறுப்பின் மூலம் வளர்வதில்லை. வெறுப்பு ஒரு சிறிய கூட்டுக்குள் சதிராடுகிறது. அன்போ வானையும் கடலையும் போல அறிவை விரியச் செய்கிறது. நிலத்தைப் பங்கு போடுவதைப்போல வானத்தைப் பங்கு போட முடிவதில்லை. மின்சார விளக்கின் ஒளி மங்கலாகவோ, பிரகாசமாகவோ வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தோன்றுமாயினும் மின்சாரம் ஒரே இடத்திலிருந்துதான் வருகிறது.‘‘பரிசேயர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் நிக்கதேம். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் நம்மோடு இருந்தாலன்றி நீர் செய்யும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது என்றார். இயேசு அவரைப் பார்த்து, ‘மறுபடியும்’ பிறந்தாலன்றி எவரும் இறை மாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, ‘‘வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?’’ என்று கேட்டார்.

இயேசு அவரைப் பார்த்து, ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறைமாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதராய் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியதுபற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அந்த ஓசை உமக்குள் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும். நிக்கதேம் அவரைப் பார்த்து, இது எப்படி நிகழ முடியும்? என்று கேட்டார். அதற்கு இயேசு, நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் இது உமக்குத் தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம். நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும், எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப் போகிறீர்கள்?

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத்தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல் மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெரும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனை தீர்ப்பளிக்க, அல்ல. தன் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர் மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை. ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கனவே தீர்ப்பு பெற்று விட்டனர். ஏனெனில், அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.’’  (யோவான் 3: 118)‘‘ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன் பக்தியின் அடி மட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவருடைய துன்பத்தைப் போக்குவதில் கடவுளைப் பார்ப்பவன் ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்.
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

 • nanteswarcowmarriage

  நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

 • LavaBombHawaii

  ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

 • Croatiaplayersreception

  குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்