SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இமயமலையில் முதல்வன்

2018-06-27@ 16:54:36

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானுக்கு, இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் சங்கட் மோட்சன் மந்திர் எனும் கோயிலின் அருகில் க்ஷோடஸ  கணபதி என்ற பெயரில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 16 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோயில் தமிழ்நாட்டு பாணியில் அமைந்திருப்பது  தனிச்சிறப்பு. இத்திருக்கோயில் மூலவர் உட்பட, பதினாறு விநாயகர் திருஉருவங்களும் தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.  ‘இமாச்சலப்பிரதேசத்தில் பனி சூழ்ந்த நிலையில் அமைந்திருக்கும் ஒரே விநாயகர் கோயில் இது மட்டும்தான்’ என்று கூறப்படுகிறது. இக்கோயிலில்  அருள்புரியும் விநாயகர்களை ஒரே சமயத்தில் வழிபடுவதால் பதினாறு செல்வங்களும் பெற்று வளமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

T.R.பரிமளரங்கன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்