SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சேவுக பெருமாள் கோயிலில் ஆனி திருவிழா தேரோட்டம் : மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்

2018-06-27@ 15:04:59

திருப்புத்தூர்: சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்டதும் ராணி மதுராந்தகநாச்சியார் ஆளுகைக்கு உட்பட்டதுமான திருப்புத்தூர் அருகே நெற்குப்பை பரியமருதுபட்டி பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் ஆனி உற்சவ விழா கடந்த 18ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமி மண்டகப்படியார்களால் திருவீதி உலா நடந்தது. ஜூன் 23ல் துவார் கிராம மண்டகப்படியார்களால் சேவுகப்பெருமாளுக்கும், பூரண புஷ்கலா அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

9ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பகல் முழுவதும் பக்தர்களின் சாமி தரிசனமும் மற்றும் அர்ச்சனை, தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சுற்றுப்புற கிராமமக்கள் ஏராளமானோர் வடம் பிடிக்க திருத்தேர் வலம் வந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்யும் வகையில் திருத்தேர் வலம் வரும் பாதை முழுவதும் மாங்கனிகளை சூறை விட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்