SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கடலாடி அருகே ஆ.பாடுவனேந்தலில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

2018-06-27@ 15:04:06

சாயல்குடி: கடலாடி அருகே ஆ.பாடுவனேந்தல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. நாட்டில் மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், பல தரப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாகவும், கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாகவும் குதிரை மற்றும் தவளும் பிள்ளையை ஊர்வலமாக  சுமந்து வரும் புரவி எடுப்பு திருவிழா ஆ.பாடுவனேந்தல் கிராமத்தி கடந்த வாரம் செவ்வாய் கிழமை காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினந்தோறும் இளைஞர் ஒயிலாட்டம், பெண்கள் கும்பியாட்டம் ஆடி வருகின்றனர். கிராமத்தின் சார்பில் நேர்த்திக்கடன் மண்குதிரை செய்ய கடந்த மாதம் எம்.கரிசல்குளம் கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. அங்கு தயார் செய்யப்பட்ட குதிரை மற்றும் தவளும் பிள்ளை, காவல் தெய்வங்கள் உருவத்தை கிராம மக்கள் நேற்று கடலாடி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து பாடுவனேந்தலில் வைத்து வழிபட்டனர்.  பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு இன்று கிராம எல்லையிலுள்ள அய்யனார் கோயிலில் வைக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்