SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

2018-06-27@ 14:43:21

சீர்காழி: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். மேலும் மருத்துவாசுரன் என்ற அசுரன் நந்திதேவரிடம் சண்டையிட்டு போது நந்தியபெருமானுக்கு உடம்பில் 9 இடங்களில் குத்துக்காயங்கள் ஏற்பட்டன. அந்த நந்தி சிவன் சன்னதியின் முன்பு, இந்த கோயிலில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட சுவேதாரண்யேஸ்வரருக்கு, சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 1008 சங்குகள் சிவவடிவத்தில் அலங்கரிக்கபட்டிருந்தது. பின்னர் அந்த சங்குகளிலில் நறுமணம் பொருட்கள் கலந்த புனிதநீர் நிரப்பட்டன.

இதனை தொடர்ந்து ஆலய அர்ச்சகர் ராஜாப்பா குருக்கள் முன்னிலையில் யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சங்குகளுக்கு சிறப்பு பூஜைகளும் பின்னர் வலம்புரி மற்றும் வடம்புரி சங்குகள் ஊர்வலமாக மேள, தாளம் முழங்கிட எடுத்து செல்லப்பட்டது. பின்னர் சுவேதாரண்யேஸ்வரருக்கு நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டது. இதனை தொடர்ந்து 1008 சங்குகளில் உள்ள புனிதநீர் சிவனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் மேலாளர் கண்ணன், பேஸ்கர் திருஞானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்