SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழா சந்தனகுட ஊர்வலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

2018-06-27@ 14:38:37

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உரூஸ் திருவிழாவையொட்டி நடந்த சந்தனகுட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழா, கடந்த 24ம்  தேதி அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று  இரவு கர்நாடகா முகமத்அலி தபரேஸ் தலைமையில் கர்நாடகா ஜமீர் ஷெஹஸதா  குழுவினருக்கும், ஹைதராபாத் ரஸியா சுல்தான குழுவினருக்கும் இடையே போட்டி  உருது கவ்வாலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8  மணிக்கு, கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டையில் இருந்து பைதுல்மால் மாவட்ட தலைவர் நவாப் தலைமையில், அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட  குதிரை சாரட் வண்டியில், யானை மீது சந்தனகுட ஏற்றி நடமாடும் இன்னிசை  குழுவினருடன் ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலமானது, பழையபேட்டை, காந்தி ரோடு, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்ஜெயில் ரோடு, சேலம் ரோடு, பெங்களூர் ரோடு, லண்டன்பேட்டை, புறநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சப் ரோடு வழியாக சையத்பாஷா சங்கல்தோப்பு தர்காவை சென்றடைந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து இரவு தமிழ் இஸ்லாமிய பாடகர் புதுக்கோட்டை பாஷா இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. விழா நடந்த இரண்டு நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை 5  மணியளவில் தர்காவில் பாத்திஹா ஓதி தப்ரூக் வழங்கப்பட்டது. இதற்கான  ஏற்பாடுகளை சங்கல்தோப்பு தர்கா கமிட்டி, நகர ஜமாத்தார்கள் மற்றும் ஊர்  பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

  • Croatiaplayersreception

    குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்