SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கடல் கடந்த காரைக்கால் அம்மையார்

2018-06-27@ 09:37:19

காரைக்கால் அம்மையாரின் புகழ் இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் பரவியுள்ளது என்பது பல ஆய்வுகளின் உண்மை. 9ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பேரரசர்கள், தங்களது இறைப்பணியை இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்து, அதாவது, சோழபேரரசு எங்கெல்லாம் ஆட்சி அமைத்ததோ அங்கெல்லாம் காரைக்கால் அம்மையாரின் சிந்தாந்த நெறிகளை பரப்பி, சிவவழிப்பாட்டு முறைகளை பிரபலப்படுத்தி, காரைக்கால் அம்மையாரின் புகழ் என்றும் அழியாதிருக்க, பாறைகளில் அம்மையாரின் சிற்பங்களை வடித்து அம்மையாரின் புகழை பரப்பியுள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால், தெற்கு கம்போடியாவின் டாக்கியோ என்ற இடத்தில் சிற்றரசர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் சிவபெருமான் வலது புறத்தில் பிரம்மன், இடது புறத்தில் காரைக்கால் அம்மையார் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது போல் சிலைகள் அமைந்துள்ளது.

கம்போடியா பாட்டி என்ற பகுதியில் போனம் தீமாடோ என்ற மலைப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் காரைக்கால் அம்மையார் உருவச்சிலைகள், சிவபெருமானோடு இணைந்து காட்சியளிப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இளம்வயதினிலேயே காரைக்கால் அம்மையார் சிவபெருமான் மீது கொண்ட பற்றின் காரணமாக உலக வாழ்க்கையை துறந்து, உருவத்தை தொலைத்து, சிறப்பு மிகு தவத்தினால், காரைக்கால் அம்மையார் இறைவனின் நிழலில் நிலைத்து நிற்கிறார் என கம்போடியா மக்கள் பெருமையுடன் சொல்லி வணங்கி வருவதை இன்றும் வரலாற்று பதிவுகளில் உள்ளது. இதேபோல், தாய்லாந்திலும் அம்மையாரின் புகழ் கடல் கடந்து பரவியுள்ளது. அதாவது 11ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்ட தாய்லாந்து நாட்டின் நினைவு சின்னமாக உள்ள ஆலயங்களில் நாட்டிய கோலத்திலான சிவபெருமான் சிலை அருகே தோலுரித்த நிலையில் பெண் உருவம் காணப்படுவதாகவும், அது காரைக்கால் அம்மையாரே என அந்நாட்டின் துறவிகள் போற்றி வணங்கிவருகின்றனர்.

தாய்லாந்தில் உள்ள 2ம் சூரியவர்ம அரசன் அங்கூரில் அமைத்த ஆலயங்களின் நுழைவு வாயிலில், காரைக்கால் அம்மையார் சிவபெருமானை புகழ்ந்து பாடிய பாடல்கள் கல்வெட்டில் செதுக்கிவைத்துள்ளனர். கம்போடியா மற்றும் தாய்லாந்து மக்கள் இணைந்து உருவாக்கிய ஹேமர் கலையை மையமாகக்கொண்டு பல சிவாலயங்களும், நடராஜர், அருகில் காரைக்கால் அம்மையாரும் அமர்ந்திருப்பது போன்ற கல்வெட்டுகள் பல உள்ளது. இப்படி மலேசியா, இலங்கை, பர்மா தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளில் காரைக்கால் அம்மையார் புகழ் பரவியுள்ளது என வராலாற்று சிந்தனையாளர்கள், ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை இன்றும் வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்திவருகின்றனர்.

வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றையும், இறைபக்தி குறித்தும், சைவ சிந்தாந்த நெறிகள் குறித்தும், இன்றைய இளம் தலைமுறையினரும் அவசியம் தெரிந்துவைத்திருக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோயில் சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதக்காலம் காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தவேளையில், ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் புதிய அறங்காவலர் குழு, காரைக்காலில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள் காரைக்கால் அம்மையாரின் புகழை உலகறிய செய்ய அவரின் தமிழ் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும், உலகமெங்கும் உள்ள அவரது கலைபொக்கிஷங்களையும் ஒன்றிணைத்து, உலகறிய செய்யவேண்டும். குறிப்பாக சொல்லப் போனால், காரைக்கால் அம்மையார் கோவில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்று பொக்கிஷங்களை உலக நாடுகள்தோறும் திரட்டி சிறப்பு மியூசியம் அமைக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • georgiyaropecar

  ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

 • chinaindustryexpo

  சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

 • thirupathiseventh

  திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

 • 20-09-2018

  20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்