SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிப்பட்டி கிராமம் செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

2018-06-26@ 15:07:22

சேலம்: பள்ளிப்பட்டி கிராமம் செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். பள்ளிப்பட்டி கிராமம் கொட்டாய் தெருவில், செல்வகணபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து வாஸ்து பூஜை நடந்தது.

தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். காலையில், பால் குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கபடி போட்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்