SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மரவுரி ராமர் திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா

2018-06-26@ 15:06:39

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி மாத தெப்ப உற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து தினந்தோறும் கோயிலில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி கோயில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன்படி நேற்று காலை பல்லக்கில் புறப்பட்டு கோயிலின் நான்கு ராஜவீதிகள் மற்றும் திருமஞ்சன வீதி வழியாக அரித்திராநதி தென்கரையில் உள்ள மண்டபத்திற்கு வீதி உலா சென்றார். அங்கிருந்து இரவில் அனுமந்த வாகனத்தில் மரவுரி ராமர் திருக்கோலத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமி வாண வேடிக்கைகளுடன் அரித்திராநதி குளத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகள் மற்றும் அன்னவாசல் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்