SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேத்துப்பட்டு முகமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

2018-06-26@ 15:06:12

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு முகமாரியம்மன் கோயில்   கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு ராஜாஜி தெரு அரசமரம் அருகில் உள்ள ஸ்ரீமுகமாரியம்மன்  கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்றுமுன்தினம் நடந்த யாக சாலை பூஜையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். மாலையில் 2ம் கால லட்சுமி கணபதி பூஜை, சப்த கன்னியர்கள் மூல மந்திரம் நடந்தது.
நேற்று காலை  சிறப்பு யாகங்களுடன் கலச புறப்பாடு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முகமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி  வீதி உலா, நாடகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்