SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு ஊர்வலம்

2018-06-26@ 15:04:26

சாயல்குடி: மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கடலாடி அருகே ஆ.புனவாசல் அய்யனார், ஏகநாதர் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது.
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், பல தரப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கிராமமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாகவும் குதிரை மற்றும் தவளும் பிள்ளையை ஊர்வலமாக சுமந்து வரும் புரவி எடுப்பு திருவிழா ஆ.புனவாசலில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் திங்கள் கிழமை காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினந்தோறும் இளைஞர் ஒயிலாட்டம், பெண்கள் கும்மியாட்டம் ஆடி வருகின்றனர். கிராமத்தின் சார்பில் நேர்த்திக்கடனாக மண் குதிரை செய்ய கடந்த மாதம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. அங்கு தயார் செய்யப்பட்ட குதிரை மற்றும் தவளும் பிள்ளை, காவல் தெய்வங்கள் உருவத்தை கிராம மக்கள் நேற்று காத்தனேந்தல், பறையங்குளம், ஆப்பனூர் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து புனவாசலில் வைத்து வழிபட்டனர். பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு இன்று கிராம எல்லையிலுள்ள அய்யனார் கோயிலில் வைக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்