SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்விச்செல்வம் அருளும் தீர்க்காஜலேஸ்வரர்

2018-06-23@ 09:29:03

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணத்தில் உள்ள தீர்க்காஜலேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூலவர் தீர்க்காஜலேஸ்வரர் திருநாமத்தோடும், தாயார் பாலாம்பிகை என்ற பெயரில் கருணையே வடிவாக காட்சியளிக்கிறார். சுகபிரம்ம முனிவர் தவம் செய்ய ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தார். அந்த மலை சிவசொருபமாகவே காட்சி தந்ததை கண்டு மெய்சிலிர்த்து பூரித்துபோனார். பின்னர் சிவபெருமானை எண்ணி, கடும் தவத்தில் மூழ்கினார் சுகபிரம்ம முனிவர். முன்னதாக விஷ வண்டுகளோ, பூச்சிகளோ தாக்காமல் இருக்க தான் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றி அரண் அமைக்கவும், தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். ஆனால் மலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் சுகபிரம்ம முனிவர் இறைவனை நோக்கி மனம் உருகிப் பிரார்த்தனை செய்தார். சிவனருளால் அங்கே தண்ணீர் மெல்ல ஊற்றெடுக்க தொடங்கியது. இதை எண்ணி ஆனந்தம் அடைந்த சுகபிரம்ம முனிவர், அந்த நீரை எடுத்துப்பருகினார். மேலும் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து ஊற்று நீரால் அபிஷேகம் செய்தார். தொடர்ந்து ஈசனை வணங்கிவிட்டு கடும் தவத்தில் மூழ்கினார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் தம்பதி சமேதரராக சுகபிரம்ம முனிவருக்கு காட்சி தந்தார். தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கி தொழுதார். காலங்கள் கழிந்தன. சோழமன்னன் ஒருவன் இந்த வழியாக வந்தபோது மலையைக்கண்டான். மலைமீது முனிவர்கள் பலர் சிவபூஜையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை வணங்கி இந்தமலையின் மாண்பும், சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்ததும் குறித்தும் கேட்டறிந்தான்.

மகிழ்ந்த சோழ மன்னன் மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர்மக்கள் வணங்கிட வசதியாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டு, கோயில் எழுப்பினான். இறைவனுக்கு “தீர்க்காஜலேஸ்வரர்” என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான். இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சக்தி மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிரகத் திருமேனிகள் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழை பொய்த்து போனால், விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரரின் சன்னதி ஒன்று உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இங்கே அழகு கொஞ்சும் சுப்பிரமணியரின் திருமேனியையும், பிரகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம். பங்குனித் திருவிழா மற்றும் ஆடிக்கிருத்திகையில் தெப்பத்திருவிழாவும் திருக்கல்யாண வைபவமும் வெகு விமரிசையாக நடைபெறும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் தோஷங்கள் விலகவும் ஞானம் பெறவும் சுவாமியை வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் தீபம் ஏற்றியும், அம்மனுக்கு பாலாபிசேகம் செய்தும் வழிபடுகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-07-2018

  15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-07-2018

  14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • TrumpLondonprotest

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

 • Michigancorpseflower

  18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

 • Chinachemicalplantfire

  சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்