SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதர் என்போர் யார்?

2018-06-22@ 15:21:13

நோயின் கடுமையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் அருகில் நின்றுகொண்டிருந்தார் மகன். மருத்துவர் பரிசோதித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் அடுத்த ஊரிலிருந்து வந்திருந்த ஒருவர், மகனைத் தனியே அழைத்து, தம்பி! உன் அப்பா எனக்குப் பணம் தரவேண்டும். அதை இப்போது எனக்குக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார். அப்படியா? என்ற மகன் அவரை அழைத்துக்கொண்டு அப்பாவை நெருங்கி அப்பா உண்மைதானா? என்றான். அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத்திறந்து ...ப்பே...ப்பே... பா...பா என்றார். பேச்சு தெளிவாக வரவில்லை. திணறினார். வந்தவர் பதறினார். தம்பி! பரவாயில்லை. பாவம், அவரால் பேசக்கூட முடியவில்லை. நான் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார். தம்பி! அப்பாவுக்கு நான் பணம் தரவேண்டி இருக்கிறது...என்று ஆரம்பித்தார்.

அப்போது படுக்கையில் இருந்தவர் சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். தெளிவாகப் பேசத் தொடங்கினார். ஆமாம்! சரிதான், ஆறுமாசத்துக்கு முன்னாடி அவசரத்தேவை என்று வாங்கிக்கிட்டு போனீர்களே என்றார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாமல் திணறிய அந்த மனிதருக்கு இப்போது எப்படி இவ்வளவு நன்றாகப் பேச முடிந்தது? இன்றைக்கு இப்படியும் சில பக்தர்கள் இருக்கிறார்கள். ஆண்டவனே  சிபாரிசு பண்ணினாலும் அடுத்தவர்களுக்கு உதவத் தயங்குவார்கள். ஆனால், ஆண்டவனே, வேண்டாம் என்று சொன்னாலும் அடுத்தவர்கள் செய்கிற உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்ட அடியார்களைப்பற்றி என்ன நினைப்பது? இவர்களை எல்லாம் ‘குதிரை விசுவாசிகள்’ என்று சொல்கிறார்கள் பெரியோர்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? புல் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்வதும் குதிரைகள் தானே!

‘‘மனிதர் என்போர் யார்? அவர்களால் ஏற்படும் நன்மைகள் என்ன? அவர்களிடம் இருக்கும் நன்மைகள் யாவை? தீமைகள் யாவை? மனிதருடைய வாழ்நாள்களின் எண்ணிக்கைகூடிப் போனால் நூறு ஆண்டுகள். நித்தியத்தோடு ஒப்பிடும்போது அந்தச் சில ஆண்டுகள் கடல் நீரில் ஒரு துளி போன்றவை; கடல் மணலில் ஒரு துகள் போன்றவை. இதனால்தான் ஆண்டவர் அவர்கள் மீது பொறுமையுடன் இருக்கிறார். தம் இரக்கத்தை அவர்கள் மீது பொழிகிறார். அவர்களின் அழிவு இரங்கத்தக்கது என அவர் கண்டறிகிறார். அளவுக்கு மிகுதியாகவே அவர்களை மன்னிக்கிறார். ஆண்டவர் எல்லா உயிருக்கும் இரக்கம் காட்டுகிறார். அவற்றைக் கண்டிக்கிறார்; பயிற்றுவிக்கிறார். அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இடையர்கள் தங்கள் மந்தையைத் தங்களிடம் மீண்டும் அழைத்துக்கொள்வது போல் அவரும் செய்கிறார். தாம் அளிக்கும் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வோர் மீதும், தம் தீர்ப்புகளை ஆர்வத்துடன் தேடுவோர் மீதும் இரக்கம் காட்டுகிறார்.’’  
(சீராக் 18:814)

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்