SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோயிலில் ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம்

2018-06-21@ 15:04:21

கும்பகோணம்:  கும்பகோணம் அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு நேற்று ஸ்ரீசூக்த ஹோமம் நேற்று நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாக திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும். இங்குள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்திபெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம்.
பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.

இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாகச் சிறப்பிக்கப்பட்டு தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாலெட்சுமி பிராத்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் செண்பகவல்லி தாயாருக்கு காலை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்