SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் அமலிநகர் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

2018-06-21@ 15:03:22

திருச்செந்தூர்: அமலிநகர் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் அமலிநகர் புதுமை புனிதர் அந்தோணியார் திருத்தலம் 44வது ஆண்டு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து கொடிபவனி புறப்பட்டு முக்கிய வீதி வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. அதைதொடர்ந்து டிஎம்எஸ்எஸ்எஸ் பெஞ்சமின் டிசூசா கொடியேற்றி மறையுரையாற்றினர். இதில் பங்குதந்தை ரவீந்தீரன் பர்னாந்து உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமும் காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், பகல் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வரும் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு புனிதரின் சப்பரபவனியை தொடர்ந்து ஞானப்பிரகாசியார்பட்டினம் பங்குதந்தை அமலதாஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. ஜூலை 1ம் தேதி 5.30 மணிக்கு முதல் திருப்பலி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆயர் இல்லம் செல்வ ராசு தலைமை வகித்து மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து மற்றும் புனித அன்னாள் அருட்சகோதரிகள், ஊர்நலக்கமிட்டி, இறைமக்கள் ஆகியோர் செய்து
வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்