SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ போலோ சாய்பாபா ஆலயம்

2018-06-21@ 09:37:42

புதுச்சேரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வில்லியனூர் கொம்யூன் உறுவையாறு என்ற இடத்தில் ஷீரடி சாய்பாபா நகரில் அமையப்பெற்றுள்ளது  ஸ்ரீ போலோ சாய்பாபா ஆலயம். இக்கோவிலுக்கு 2009 ஆம் ஆண்டு பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. பின்னர் 24.06.2010ல் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இக்கோவிலில் பாபா சிறப்பம்சத்துடன் அமர்ந்துள்ளார். பாபாவின் அருளால் இக்கோவில் உருவாகி 8ம் ஆண்டுவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில் பிரதிவாரம் வியாழக்கிழமைகளில் மஹாஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும். இங்கு உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து வணங்கி பலவிதமான பிரார்த்தனைகள் செய்து மனநிம்மதியுடன் திரும்புகின்றனர்.

துனி விரத பூஜை:


இக்கோவிலில் நடைபெறும் துனி விரத பூஜை மிகவும் விசேஷமாகும். குடும்ப ஒற்றுமை, குழந்தையின்மை, உடல் ஆரோக்கியத்திற்காக நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொள்ள 9 வாரம் விரதம் இருந்து நவதானியங்கள் மற்றும் கொப்பரை தேங்காய் கொண்டு துனி விரத பூஜை செய்தால் வேண்டுதல் நினைத்த காரியம் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது.

தீ ஜூவாலையில் பாபா:

பல முறை இக்கோவிலில் நடைபெற்ற ஹோமத்தில் தீ ஜூவாலையில் பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த காட்சியை கண்ட பக்தர்கள் மனமுருகி பாபா பாபா என்று பக்தி முழக்கமிட்டு வணங்கினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பதிவான காட்சி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாபாவின் மகிமைகளை கேள்விப்பட்டு இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு வேண்டுதல் நிறைவேறு வதாக கூறுகிறார்கள்.

அன்னதானம்:


இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கிலப்புத்தாண்டு, ராமநவமி, பாபா பிறந்தநாள், விஜயதசமி, பாபா நினைவு நாள் ஆகிய நாட்களில் விசேஷ பூஜை, ஆரத்தி , பஜனைகள் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் தினமும் நான்கு கால பூஜையும் (ஆரத்தி), வியாழனன்று சிறப்பு ஆராதனை, பஜனை மற்றும் அன்றைய நாள் முழுவதும் அன்னதானமும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தி செல்கின்றனர்.

பால்குட அபிஷேகம்:

சாய்பாபா ஆலயத்தின் சிறப்புகள் குறித்து பக்தர்கள் கூறுகையில், இக்கோவிலில் துனிவிரத பூஜை, வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு ஆராதனை மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி வாய்ந்த இந்த பூஜையில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். மேலும் பிரதி வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாபாவுக்கு நடத்தப்படும் பால்குடம் அபிஷேகம் மிகவும் விமரிசையாக பாபா பக்தர்களால் செய்யப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் பாபாவை வேண்டுவதால் குடும்பத்தில் பல நன்மைகள் நடப்பதாகவும், இங்கு வந்தாலே மன அமைதி கிடைப்பதாகவும் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர். அமானுஷியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாபாவை நம்பி வந்து குணமாகி திரும்புகின்றனர். இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

செல்வது எப்படி?

புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வில்லியனூர் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உறுவையாறு ஸ்ரீபோலோ சாய்பாபா ஆலயம் உள்ளது.

பாபாவின் சத்தியவாக்கு

எவன் ஒருவன் என்னுடைய திருவடிகளை சரணடைகிறானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்கு காட்சி தருவேன்

எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.

கலங்காதே நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

 • kajapuyal_roof111

  திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

 • 16-11-2018

  16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்