SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணமங்கலம் அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

2018-06-18@ 14:05:06

கண்ணமங்கலம்:கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் மகாபாரத நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

பின்னர், மாலையில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு திரவுபதி அம்மன் திருவீதி உலா பேண்டு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்