SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்சத்திர பொருத்தமும், ஜாதக அமைப்பும்?

2018-06-18@ 07:31:40

செவி வழித்தகவலாக வரும் பழக்க வழக்கம், பழமொழி, வழிபாடு, மூடநம்பிக்கை போன்றவற்றிற்கு எந்தவிதமான வரலாற்றுக் குறிப்போ, சான்றோ, ஆவணமோ, சாட்சியோ இல்லை எனலாம். அதேபோல ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் இதனால் என்ன பயன் என்று தெரியாமலே சில சம்பிரதாயங்களை யாரோ சொன்னார் என்று அவ்வாறு கேள்விப்பட்டதை ஆராயாமல், கடைபிடித்து வருகிறோம். இதேபோல ஜோதிட விஷயங்கள், தோஷங்கள், ஜாதக பழமொழிகள், நட்சத்திர அபவாதங்கள் எல்லாம் செவிவழி அம்சங்களாகவே பல காலங்களாக வதந்திகளாக உலா வருகின்றன.

நட்சத்திர விஷயங்கள்

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை பல விஷயங்களில் பல முரண்பாடான கருத்துகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. பலவகையான பஞ்சாங்கங்களில் சொல்லப்படும் கணக்குகள், குறிப்புகள், நட்சத்திரம், திதி, ராசி மாற்றம், கிரக மாற்றம், பெயர்ச்சிகள் எல்லாம் பல்வேறு விதமான குழப்பங்களுடன் இருக்கும். அந்தந்த ஊர்களில், மாவட்டங்களில் இருப்பவர்கள் எங்கள் கணக்குதான் சரி என்று சாதிப்பார்கள். போதாக்குறைக்கு ஜோதிடர்களிடையே குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் இவற்றிற்கு தலா மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அசுவினி, மகம், மூலம்: கேதுவின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்.
பரணி, பூரம், பூராடம்: சுக்கிரன் ஆதிக்கம்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்: சூரியன் ஆதிக்கம்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சந்திரன் ஆதிக்கம்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்: செவ்வாய் ஆதிக்கம்.
திருவாதிரை, சுவாதி, சதயம்: ராகுவின் ஆதிக்கம்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி: குரு ஆதிக்கம்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி  : சனி ஆதிக்கம்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி: புதன் ஆதிக்கம்.

ஜோதிட சாஸ்திர அமைப்பின்படி 21 நட்சத்திரங்களும் அந்தந்த கிரகத்தின் தன்மைகளை பிரதிபலிப்பவை. எல்லா நட்சத்திரங்களுமே நல்லவைதான், சிறப்பானவைதான். எந்த நட்சத்திரத்திற்கும் உயர்வு, தனிச்சிறப்பு, யோகம், அந்தஸ்து என கொடுக்கப்படவில்லை. சில நட்சத்திரங்களில் கடவுள், மகான்கள், அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் அவதாரம் செய்ததாக சொல்லப்படுவதால் ஒருசிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பெரிதுபடுத்தி பேசிவருகிறார்கள். அதேபோல தைப்பூசம், மாசிமகம், ஆனிமூலம் என, மாதங்களுடன் சேர்ந்து வரும் நட்சத்திரங்களை மிகைப்படுத்தி சொல்லுவார்கள். இந்த பிரிவினை, பேதம், தோஷ நட்சத்திரம், யோக நட்சத்திரம் என்று எதுவும் கிடையாது. இதுபற்றி பழம்பெரும் ேஜாதிட நூல்களில் எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.

நட்சத்திர குழப்பங்கள்

திருமணத்திற்கு பெண் பார்க்கின்றபோதுதான் இந்த நட்சத்திர பிரச்னைகள் தலை தூக்குகின்றன. இந்த நட்சத்திரம் வேண்டாம், இது ஆகாது, இந்த நட்சத்திரம் கொண்ட பெண்ணால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். மேலும் ஆகாத நட்சத்திரங்கள், சேராத நட்சத்திரங்கள் என ஒரு பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஜோதிட சாஸ்திர கணக்குப்படி இது எதுவும் கொஞ்சமும் உண்மையில்லை. சிலர் நட்சத்திரம் மாறும்போது பிறப்பார்கள். இது நட்சத்திர சந்தி என்று சொல்லப்படும். இதனால் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் தன்மைகள் ஜாதகருக்கு இருக்காது. மேலும் திருக்கணித பஞ்சாங்கம், வாக்கியப் பஞ்சாங்கம், பாம்பு பஞ்சாங்கம் என பலவகையான பஞ்சாங்கங்களின் அடிப்படையில் நட்சத்திர மாற்றம், ராசி மாற்றம் பலருக்கு இருக்கும்.

ஒரு காலத்தில் வெறும் பெயர், ராசி, நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தார்கள். இது, அந்த காலத்துப் பாரம்பரியம், பரம்பரை, கூட்டுக் குடும்பம், உறவின் வலிமை, விட்டுக்கொடுத்தல், கலாசாரம், பண்பாடு போன்றவற்றால் ஒத்துப்போனது. பிரச்னைகள், மனக்கஷ்டங்கள் வந்தால் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசி கூடிவாழ்ந்தார்கள். சகிப்புத் தன்மையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார்கள். இந்த காலத்தில் இத்தகைய குடும்ப அமைப்பு வேகமாக மாறி வருவதால் அதற்கேற்ப சாஸ்திர, சம்பிரதாய பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. ஆகையால் ஜாதகத்தில் கிரக அமைப்பின்படி தசா புக்தி காலங்களில் இன்றும் கிரக பலாபலன்கள் சரியாக இருப்பதால் ஜாதக கிரக அமைப்பை சீர்தூக்கிப் பார்த்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்