SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரமலான் கொண்டாட்டம்

2018-06-15@ 10:03:26

இன்று நோன்பு திறக்க: மாலை 6.45 மணி.

ஒரு மாதத்திற்கு பிறகு 6 நாட்கள்!

ரமலானின் அற்புத 30 நோன்புகளின் தருணங்கள் கடந்துள்ள நிலையில், தொடர்ந்து அருள் சிந்தும் 6 நோன்புகள் காத்திருக்கின்றன.
ஹள்ரத் அய்யூபுல் அன்சாரி(ரலி) அவர்கள், ‘‘எவர் ரமலானின் நோன்புகளை நோற்று, அதன் பின்னர் வரும் ஷவ்வாலில் 6 நோன்புகளையும் நோற்கிறாரோ அவர் ஆண்டு முழுவதும் நோற்றவரைப் போலாவார்’(நூல்: முஸ்லிம்)’’ என்று நபிகளார் அறிவித்ததாக தெரிவிக்கிறார்கள்.
இந்த 36 நாட்களின் நோன்பு, ஆண்டின் 360 நாட்கள் நோன்பிருப்பதற்கான நலன்களை எப்படித் தரும்?

‘‘யார் ஒரு நன்மையைச் செய்கிறார்களோ, அதைப்போன்ற 10 நன்மைகள் அவருக்குண்டு’’ என்ற குர்ஆனின் கூற்றுப்படி, ‘‘ரமலானில் நாம் நோற்கும் 30 நோன்புகள், 300 நோன்புகளுக்குச் சமம். ஷவ்வாலின் 6 நோன்புகளை நோற்று விட்டால், 60 நோன்புகளின் நன்மையும் சேர்ந்து ஆண்டு முழுக்க நோன்பு வைத்த நன்மையை அள்ளித்தரும்’’ எனக் கொள்ளலாம்.

‘‘நிச்சயமாக அல்லாஹ், வானங்களையும் பூமியையும் ஷவ்வால் மாதத்தின் ஆரம்ப 6 நாட்களில் உருவாக்கினான். யார் அந்த 6 நாட்களில் நோன்பிருக்கிறாரோ, அவருக்கு படைப்பினங்களின் எண்ணிக்கையளவு நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். அவரது குற்றங்களை மன்னித்து விடுகிறான். பல உயர் பதவிகளை அவருக்கு அளிக்கிறான்’’ என்ற நபிகளார்,  மேலும், ‘ரமலானுடன், இந்த 6 நோன்புகளையும் நோற்பது தாய் அன்று பெற்றெடுத்த பாலகரைப்போல் குற்றமற்றவராகி விடுவார்’’ என்கிறார்கள்.

அப்புறமென்ன... இன்று நோன்பு இருந்து நாளை ரமலானை மகிழ்வோடு கொண்டாடி விட்டு, மறுநாளே 6 நோன்புகளையும் அவசியம் நோற்பது முழுமைப் பயனைத் தரும்தானே? இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

(நிறைவடைந்தது..)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்