SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆனி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2018-06-14@ 17:22:25

ஆனி 1, ஜூன் 15, வெள்ளி  

துவிதீயை. ஷடசீதி புண்ணிய காலம். சந்திர தரிசனம். கரிநாள். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. பட்டீஸ்வரம் முத்துப்பந்தல். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.

ஆனி 2, ஜூன் 16, சனி  

ரம்பா திருதியை. ரம்ஜான் பண்டிகை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, பத்ராசல ராமர் புறப்பாடு.

ஆனி 3, ஜூன் 17, ஞாயிறு  

சதுர்த்தி விரதம். கதலீ கெளரி விரதம். மெலட்டூர் விநாயகர், தேரெழுந்தூர் ஞானசம்பந்தர், திருமயம் சத்யமூர்த்திப்பெருமாள் புறப்பாடு.

ஆனி 4, ஜூன் 18, திங்கள்  

பஞ்சமி. மாணிக்கவாசகர். அஹோபில மடம் 45ம் பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். சோழ வந்தான் ஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். கானாடுகாத்தான், திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.  சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

ஆனி 5, ஜூன் 19, செவ்வாய்  

சஷ்டி விரதம். அமர்நீதியார் ஆராதனை. திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம். சுவாமி தங்கப் பூங்கோயிலிலும், அம்பாள் சப்பரத்திலும் பவனி. ஆரண்ய கெளரி விரதம். திருமலை சின்னஜீயர் ஸ்வாமி திருநட்சத்திரம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் சிம்மவாகனத்தில் புறப்பாடு.

ஆனி 6, ஜூன் 20, புதன்  

சப்தமி, ஆனி உத்திர தரிசனம். சிதம்பரம் சிவபெருமான் திருத்தேர். பின்னிரவு நடராஜர் அபிஷேகம், சோழவந்தான் ஜனக மாரியம்மன் யாளிவாகனத்தில் புறப்பாடு. கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.

ஆனி 7, ஜூன் 21, வியாழன்  

அஷ்டமி. சூரிய உதயத்திற்கு முன் ஆனி உத்திர தரிசனம். சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம். சிதம்பரம் நடராஜர் ஆனித்திருமஞ்சனம்.

ஆனி 8, ஜூன் 22, வெள்ளி  

நவமி. பாபஹர தசமி. மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவன் தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். மகா சுதர்சன ஜெயந்தி. காஞ்சி வரதர் ஆனி கருடசேவை. மதுராந்தகம் கோதண்ட ராமஸ்வாமி உற்சவம். திருநெல்வேலி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் இரவு சுவாமி அம்பாள் இருவரும் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பவனி.

ஆனி 9, ஜூன் 23, சனி   

தசமி. பெரியாழ்வார். சொக்கலிங்கப்புதூர் சிவாலயங்களில் வருஷாபிஷேகம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம். தோளுக்கினியானில் பவனி. திருச்சானூர் தாயார் தெப்பம்.  திருச்செந்தூர் செந்திலாண்டவர் வருஷாபிஷேகம்.

ஆனி 10, ஜூன் 24, ஞாயிறு  


ஏகாதசி. துவாதசி. திருநெல்வேலி ஸ்ரீசுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. கண்டதேவி சிவபெருமான் பவனி, திருமலை திருப்பதி ஜேஷ்டாபிஷேகம் ஆரம்பம். கும்பகோணம் ஆராவமுதன் கருடசேவை.

ஆனி 11, ஜூன் 25, திங்கள்  

திரயோதசி. பிரதோஷம். திருநெல்வேலி சுவாமி தந்தப் பல்லக்கு, அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கில் பவனி, மதுராந்தகம் கோதண்டராமர் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.

ஆனி 12, ஜூன் 26, செவ்வாய்  

சதுர்த்தசி. சோழவந்தான் ஜனக மாரியம்மன் பாற்குடக் காட்சி. திருவஹிந்திரபுரம் ஜேஷ்டாபிஷேகம். ஹயக்ரீவர் தேசிகன் ஏகாஸன திருமஞ்சனம். கானாடுகாத்தான், கண்டதேவி தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

ஆனி 13, ஜூன் 27, புதன்  


பௌர்ணமி. காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. திருவண்ணாமலை கிரிவலம் காலை 9.30 முதல் நாளை பகல் 11.08 வரை. திருச்சானூர் தெப்போற்சவ முடிவு. திருநெல்வேலி நெல்லையப்பர் ரதோற்ஸவம். சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

ஆனி 14, ஜூன் 28, வியாழன்   

பிரதமை. அருணகிரியார் குருபூஜை. மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை. மதுராந்தகம் பெரிய பெருமாள் உற்சவம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணர் யானை வாகனத்திலும் தாயார் தண்டியலிலும் பவனி,

ஆனி 15, ஜூன் 29, வெள்ளி  

துவிதீயை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் திருநட்சத்திரம். மதுராந்தகம் ராமர் திருத்தேர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

ஆனி 16, ஜூன் 30, சனி  

திருதியை. அஹோபில மடம் ஸ்ரீமத் 13வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஆனி 17, ஜூலை 1, ஞாயிறு  

சங்கடஹர சதுர்த்தி. திருவோண விரதம். சென்னை சுகர் ஆஸ்ரம சுகப்பிரம்ம மகரிஷி மகாஜெயந்தி. காஞ்சி வரதர் ஜேஷ்டாபிஷேகம். கோயம்பேடு சக்கரஸ்நானம். திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் தேரோட்டம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சந்நதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஆனி 18, ஜூலை 2, திங்கள்

பஞ்சமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் ஸப்தாவரணம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஆனி 19, ஜூலை 3, செவ்வாய்  

சஷ்டி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஜனகமாரியம்மன் ரதோற்சவம்.

ஆனி 20, ஜூலை 4, புதன்  

சப்தமி. சோழவந்தான் ஜனகமாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா. ஊஞ்சல் உற்சவ சேவை, விவேகானந்தர் நினைவு நாள்.

ஆனி 21, ஜூலை 5, வியாழன்  

அஷ்டமி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேலுடன் தரிசனம்.

ஆனி 22, ஜூலை 6, வெள்ளி  

நவமி. ஏயர்கோன் கலிக்காமர். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. தேவகோட்டை ரங்கநாதர் பவனி. திருவிடைமருதூர் பிரஹத் குஜாம்பிகை புறப்பாடு.

ஆனி 23,  ஜூலை 7, சனி  

தசமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. குச்சனூர் சனீஸ்வரபகவான் சிறப்பு அபிஷேகம். துர்க்கா ஸ்வாபனம்.

ஆனி 24, ஜூலை 8, ஞாயிறு  

தசமி. திருவண்ணாமலை, திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் அயன உற்சவாரம்பம்.

ஆனி 25, ஜூலை 9, திங்கள்  

ஸர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மாத்ரு பூதேஸ்வரர் பூஜை. திருவையாறு சிவபெருமான் புறப்பாடு. ­ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. வேளூர் கிருத்திகை.

ஆனி 26, ஜூலை 10, செவ்வாய்  


துவாதசி. திரயோதசி. பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு. மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. திருவண்ணாமலை சிவபெருமான் பவனி. கூர்ம ஜெயந்தி. மயிலாடுதுறை சோழம்பேட்டை வானமுட்டிப் பெருமாள்
ஸம்வத்ஸராபிஷேகம்.

ஆனி 27, ஜூலை 11, புதன்  

சதுர்த்தசி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்மர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் ஸஹஸ்ரகலசாபிஷேகம். மாத சிவராத்திரி.

ஆனி 28, ஜூலை 12, வியாழன்  

ஸர்வ அமாவாசை. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை சாதித்தல். திருவண்ணாமலை, திருவையாறு தலங்களில் சிவபெருமான் ரிஷபவாகன சேவை. மயிலம் முதற்பட்டம் பாலசித்தர் குருபூஜை.

ஆனி 29, ஜூலை 13, வெள்ளி  

பிரதமை. ராமநாதபுரம் கோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம். ­ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. பத்ராசலம் ராமபிரான் பவனி.

ஆனி 30, ஜூலை 14. சனி  

திருதியை. ஆஷாடமாஸம் ஆரம்பம். சந்திர தரிசனம். அமிர்த லட்சுமி விரதம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். திருமய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் புறப்பாடு. இமயஜோதி சிவானந்தர் முக்தி தினம். ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் வருஷாபிஷேகம். ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.

ஆனி 31, ஜூலை 15.  ஞாயிறு

சதுர்த்தி. கும்பகோணம் ராமர் வசந்த உற்சவ பூர்த்தி. ஸாவித்திரி விரத கல்பம். மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருவண்ணாமலை சிவபெருமான் பவனி.

ஆனி 32, ஜூலை 16, திங்கள்  

பஞ்சமி. வேளூர் சீதளகும்பம் பூர்த்தி. ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கருட வாகனத்தில் புறப்பாடு. மாணிக்கவாசகர் குருபூஜை. தேரெழுந்தூர் ஞான சம்பந்தர், மெலட்டூர் விநாயகர் புறப்பாடு. சதுர்த்தி விரதம். சந்திர தரிசனம். தட்சிணாயன புண்யகாலம் ஆரம்பம். கும்பகோணம் ஆராவமுதன் ஆலய தட்சிணவாசல் திறப்பு.

தொகுப்பு: ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • georgiyaropecar

  ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

 • chinaindustryexpo

  சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

 • thirupathiseventh

  திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

 • 20-09-2018

  20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்