SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகத்தான ரமலான் மாதம்!

2018-06-14@ 15:41:37

முகமது நபிகளார் அரபு நாட்டின் மக்கா நகரைத் துறந்து மதீனா நகருக்குச் சென்ற ‘ஹிஜ்ரத்’ எனும் நிகழ்விலிருந்தே ‘ஹிஜ்ரி’ எனும் இஸ்லாமிய ஆண்டு ஆரம்பிக்கிறது. முஹர்ரம், சபர், ரபீஉல்அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாஅதுல் அவ்வல், ஜமாஅதுல் ஆகிர், ரஜப், ஷபான், ரமலான், ஷவ்வால், துல்கதா, துல்ஹஜ் என ஒவ்வோர் ஆண்டும் 12 மாதங்களைக் கொண்டிருக்கிறது. ஆங்கில ஆண்டுக்கு 365நாட்கள் என்றால், இந்த இஸ்லாமிய ஆண்டுக்கு 354நாட்கள்தான். வளர்பிறை, தேய்பிறை எனும் சந்திரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே, இந்நாட்கள் கணக்கிடப்படுகின்றன. இஸ்லாமிய 12மாதங்களில் ரமலான் மாதம் மகா மகத்துவம் கொண்டிருக்கிறது. கோடை, குளிர், இளவேனில், மழை என இந்த ரமலான் மாதத்தில் அத்தனை ‘சீதோஷ்ணங்களும்’ கலந்திருக்கிறது.

ஆயிரம் மாதங்களை விட உயர்ந்ததாக இறைவன் திருக்குர்ஆனில் இந்த ரமலானைக் குறிப்பிடுகிறான். இம்மாதத்தில் 30 நோன்புகள் நோற்கப்படுகிறது. இந்த நோன்பு காலமே மனித ஒழுக்கம், நற்குணம், ஈகை உணர்வளிக்கிறது. ஆன்மிக உணர்வும் இந்நாட்களில்தான் உயர்கிறது. நோன்பு என்பதன் வேர்ச்சொல், ‘நோல்’ என்பதாகும். இது ‘வலிமை’ பொருள் தருகிறது. அரபி மொழியில் ‘ஸ்வ்மு’ என்பர். இதற்கு ‘தடுத்து நிறுத்துதல்’ அர்த்தமாகும். தான் நுகர உரிமையானவற்றை எல்லாம், தனது மன வலிமையால் தடுத்து நிறுத்தி வைப்பதாலேயே ‘நோன்பு’ என்றனர்.‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’ பொருள் தருகிறது. பாவங்களைக் கரித்துப் பொசுக்கும் இம்மாதத்திற்கு ‘ரமலான்’ என பெயரிட்டனர் என்பர்.

இதுதவிர, பொதுவான மாதங்களுக்கு அரேபியர் பெயர் வைத்த நேரத்தில், இந்த ஒன்பதாவது மாதம் ‘வெயில் காலமாக’ இருந்து, ‘சுட்டெரித்தல்’ பொருளில் இப்பெயரிட்டு, அடுத்தடுத்து குளிர்காலத்திலும் இம்மாதம் வந்து, ‘ரமலான்’ என்பதே நிலைத்திருக்கலாம். இந்த ரமலான் மாதத்தை, ‘ஷஹ்ருல்லாஹ்’(இறை மாதம்), ‘ஷஹ்ருல் குர்ஆன்’(மறை மாதம்), ‘ஷஹ்ருல் நஜாத்’(வெற்றி மாதம்), ‘ஷஹ்ருல் ஆலா’ (அருட்கொடைகள் மாதம்) என்றும் அழைக்கின்றனர். இறுதி வேதமான திருக்குர்ஆனுடன் இன்னபிற வேதங்களையும் வழங்கிய சிறப்புக் கொண்ட, இந்த ரமலான் நாட்கள் மகத்தானவை. இந்நாட்களை இறை வணக்கங்களில் அதிகளவில் நேரம் கழித்து, மிகுந்த பயனுள்ளதாக்குவது பேரவசியம்.

அபுதாகிர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்