SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழைப்பு மேடை

2018-06-14@ 15:41:04

முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளின் ஐவேளைத் தொழுகைக்கும் அழைப்பு (பாங்கு) விடுப்பதை அவசியமாக கருதுகின்றனர். ஊரின்  அத்தனை மக்களையும் தொழுகைக்கு அழைக்க இன்றைக்கு ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. மின்வசதியற்ற பழைய  காலத்தில் பள்ளிவாசல்களின் முன்வாசல் கோபுரத்தையொட்டி படிக்கட்டுகளுடன் மேடை அமைத்திருந்தனர். ஒவ்வொரு  தொழுகைக்கும் முன்பு இந்த படிக்கட்டு வழியாக, கோபுரத்தையொட்டிய மேடையில் நின்றபடி உரத்த குரலில் ‘அல்லாஹூ அக்பர்...  அல்லாஹூ அக்பர்...’ என தொழுகைக்கு வரும்படி ‘பாங்கு’(அழைப்பு) சொல்லியிருக்கின்றனர். இந்த உரத்த அழைப்பு ஊரையும் கடந்து  வயல்காட்டு வேலையில் இருந்தோரின் காதுகளையும் சென்றடைந்து பள்ளிவாசல்களுக்கு வர வைத்திருக்கிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தினர் ,  ‘‘எங்கள் ஊரின் தெற்கு பள்ளிவாசலிலும் இந்த அழைப்பு மேடை இருந்தது. கிராமத்திற்கு 1962ல்தான் மின்வசதி கிடைத்தது. அதற்கும் நூறாண்டு முன்பு இப்பள்ளிவாசல் தட்டோடு வேய்ந்து கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் அப்போதே மினரா எனும் கோபுரத்தையொட்டி இந்த  பாங்கு மேடையை கட்டினர். மின்வசதி கிடைத்தும் ஒலிபெருக்கி வசதி ஏற்படும் வரை இந்த உயர மேடையில்தான் தொழுகைக்கு அழைப்பு விட்டு ‘பாங்கு’ சொல்லப்பட்டது.’’ என்றனர்.
 
கடகாரச்சி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்