SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணதாசனை கவர்ந்த குர்ஆன் வரிகள்!

2018-06-14@ 15:38:13

திருக்குர்ஆனின் முக்கிய முகப்பு அத்தியாயமாக ‘சூரத்துல்ஃபாத்திஹா’ எனும் அல்ஹம்து அத்தியாயம் இருக்கிறது. இந்த அத்தியாயத்தை அறியாத, மனனம் செய்யாத முஸ்லிம்கள் இருக்க முடியாது. முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகையிலும் இதனை அவசியம் ஓதுவார்கள். ‘திருக்குர்ஆனின் மகத்தான அத்தியாயமாக’ இதனை நபிகளாரும் புகழ்ந்தார். நம்மூர் கவிஞர் கண்ணதாசன் திருக்குர்ஆனை வாசித்தறிந்தவர். இதில் இந்த ‘அல்ஹம்து’ அத்தியாய வரிகள் கவிஞரை மிகவும் கவர்ந்தது. எனவே அரபு வரிகளுக்கு, இனிய தமிழில் தன் கவித்துவத்தோடு பொருளும் தந்தார். இதோ கவிஞரின் வரிகள் வாசிப்பிற்காக... எல்லையிலா அருளாளன்.

இணையில்லா அன்புடையோன்.
அல்லாஹ்வை துணை கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
உலகமெலாம் காக்கின்ற உயர்தலைவன் அல்லாஹ்வே.

தோன்று புகழ் அனைத்திற்கும் சொந்தமென நிற்பவனாம்.

அவன் அருளாளன். அன்புடையோன்.
நீதித்திருநாளின் நிலையான பெருந்தலைவன்.
உன்னையே நாங்கள் உறுதியாய் வணங்குகிறோம்.
உன்னுடைய உதவியையே ஓயாமல் கோருகிறோம்.
நேரான பாதையிலே நீ எம்மை நடத்திடுவாய்.
அருளைக் கொடையாக்கி யார் மீது சொரிந்தனையோ.
அவர்களது பார்வையிலே அடியவரை நடத்திவிடு.
எவர் மீது உன் கோபம் எப்போதும் இறங்கி     விடுமோ.
எவர்கள் வழிதவறி இடம் மாறிப் போனாரோ.
அவர்களது வழிவிட்டு அடியவரைக் காத்து விடு.
 
முபாரிஸ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்