SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாள் பள்ளிவாசல்!

2018-06-14@ 15:37:13

மதுரை அருகே களிமங்கலம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நூற்றாண்டை கடந்திருக்கிறது. உள்புறம் பாறைத் தூண்களுடன் கற்கட்டட பழமையும், வெளிப்புறம் நவீன சீரமைப்பும் என மிளிர்கிற இப்பள்ளிவாசலின் சிறப்பு, குத்பா ஓதும்போது வழக்கமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துபவர் தன் கையில் இருக்கும் கைத்தடிக்குப்பதில் ஐந்தடி நீள ‘வாள்’ வைத்திருப்பதுதான். கலைநயமிக்க கைத்தடிகளுடன் பல பள்ளிவாசல்கள் இருக்க, ‘வெற்றிச்சின்னமாக’ கருதும் இதுபோன்ற வாள் கொண்ட பழமைப் பள்ளிவாசல்கள் தமிழகத்தில் இன்று விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கின்றன. கூரைப்பள்ளிவாசலை மாற்றி நூறாண்டுக்கு முன்பு 1909 ஜன.3ல் சாலைவசதியற்ற ஒரு ஊருக்கு பெரும் தூண்களைக் கொண்டு வந்து இப்பள்ளிவாசலை எப்படி வடிவமைத்தனர் என்பதே ஆச்சர்யத்திற்குரியது.

நவாப் காலத்து நீளமான வாள் மட்டுமல்லாது, தொழுகைக்கும், வைக்கோல், குடிசைத் தீ விபத்துகள், கண்மாய் உடைதல் என ஆபத்து நேரங்களுக்கும் மக்களைத் திரட்ட அடிக்கப்பட்ட ‘நகரா’ எனும் பழமையான ‘முரசு’ம் இப்பள்ளியில் இருக்கிறது. இன்றும் தொழுகைக்கான அழைப்பாக மட்டுமல்லாது திருமணச்சேதி தெரிவிக்கவும், நோன்பு காலங்களிலும் இந்த நகராச் சத்தத்தை ஒலிக்க விடுகின்றனர். பள்ளிவாசலுக்குள் இருக்கிற மிகப்பழமையான  இரும்புப்பெட்டியை முப்பது பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாது. ஏழு சாவியில் ஒரு சாவி போடாவிட்டாலும் திறக்க முடியாது. இப்படி பழமை அடையாளம் காட்டி இந்த பள்ளிவாசல் நிற்கிறது.

ஸமிஉன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்