SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொர்க்கத்தின் வாசல்கள் அறிவோம்!

2018-06-14@ 15:36:37

மறு உலக வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிற அனைவருக்குமே சொர்க்கத்தின் மீதான லயிப்பும், எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கும். சொர்க்கம் எப்படி இருக்கும்?‘‘ஒரு செங்கல் தங்கமாக, ஒரு செங்கல் வெள்ளியாக, இவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ள கலவை நறுமணம் கமழும் கஸ்தூரியாக, கீழே போடப்பட்டுள்ள கற்கள் முத்துக்களாக, மாணிக்கங்களாக, மண் குங்குமமாக இருக்கும்’’ என நபிகளார் கூறியதை நூல் திர்மிதி(2526) தெரிவிக்கிறது. பல்வேறு கிதாபுகளைப் புரட்டிப்போட்டு சொர்க்கம் குறித்த தேடல்களைத் தொடர்ந்தால் கற்பனைக்கெட்டாத அற்புதமிக்கது அவ்வாழ்வெனத் தெரிகிறது. இவ்வுலகத்தின் நற்செயல்களால் மறுமையில் சொர்க்கத்திற்குள் செல்வோருக்கென அவரவர் செயல்களுக்கேற்ப தனித்தனி வாசல்கள் இருக்கிற தகவல்களும் இருக்கின்றன.

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றோர் மட்டுமே சொர்க்கத்திற்குள் செல்வதற்கென ‘பாபுர் ரய்யான்’ என்ற வாசல் திறந்து கிடக்கிறது.‘பாபுஸ் ஸலாத்’  என்ற வாசல் வழியாக தொழுகையாளிகள் மட்டுமே நுழைகின்றனர். முஜாஹிதீன்கள் எனும் தியாக சீலர்களுக்கென ‘பாபுல்ஜிஹாத்’ எனும் வாசலும், தர்மம் வழங்கும் மக்கள் மட்டுமே செல்வதற்கென ‘பாபுல் ஸதகா’ எனும் வாசலும், பாவமன்னிப்பு கேட்டவர்கள் மட்டுமே நுழையும் வாசலாக ‘பாபுத் தவ்பா’ எனும் வாசலும், கோபத்தை அடக்கியவர்கள் மட்டுமே நுழைகிற வாசலாக ‘பாபுல் காளிமீனல் ஙைய்ள்’ வாசலும் சொர்க்கத்திற்குள் நுழைய திறந்து கிடக்கிறது.

விதியைப் பொருத்திக் கொண்டவர்கள் ‘பாபுர் ராளீன்’, கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்கள் ‘பாபுல் அய்மன்’, ஹாஜிகள் மட்டும், ‘பாபுல் ஹஜ்’, சொந்தத்தை முறிக்காமல் உறவினர்களுடன் இணைந்து வாழ்பவர்கள் ‘பாபுஸ் ஸிலத்’, ளுஹா தொழுகையை நிரந்தரமாக தொழுது வருபர்கள் ‘பாபுள் ளுஹா’ எனும் வாசல்கள் வழியாக நேரடியாக சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். சிறுவர்களை மனமகிழ்ச்சிப்படுத்துகிறவர்களுக்கும் தனியொரு சொர்க்க வாசல், ‘பாபுல் பரஹ்’ பெயரில் இருக்கிறது. இந்த வாசல்களில் ஏதாவதொன்றின் வழி சொர்க்கம் புகும் முயற்சியும், பயிற்சியும் இதற்கான பாடுகளும் இந்த உலகில் நம் ஒவ்வொருவரிடமும் வேண்டும்.

ஜரினா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்