SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லா காலமும் இறைவனோடு!

2018-06-14@ 15:34:11

எல்லா காலமும் இறைவனை நினைக்கும் வகையில் இஸ்லாமியர்களின் வாழ்வியலோடு சில வார்த்தைகள் நின்று நிலைக்கின்றன. தனது ஒவ்வொரு செயலிலும், இதற்கென குறிப்பிட்ட தனிப்பட்ட வாசகத்தை இஸ்லாமியர்கள் சொல்கின்றனர். இவ்வகையில், ஒரு காரியத்தை துவக்கும்போது ‘பிஸ்மில்லாஹ்’ (இறைவனின் திருப்பெயரால்) என்கின்றனர், ஏதாவது செய்ய நினைத்தால் ‘இன்ஷா அல்லாஹ்’(இறைவன் விரும்பினால்) என்கின்றனர். இதைப்போலவே, ஒன்றைப் புகழும்போது ‘சுபுஹானல்லாஹ்’, பாராட்டும்போது ‘மாஷா அல்லாஹ்’, மனிதருக்கு நன்றி தெரிவிக்க ‘ஜஸாகல்லாஹ்’, இறைவனுக்கு நன்றி தெரிவிப்பது என்றால் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கின்றனர்.

மேலும், தூங்கி எழுந்ததும் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’, தாமே தும்மினால் ‘அல்ஹம் துலில்லாஹ்’, பிறர் தும்மக் கேட்டால், ‘யர்ஹமகுல்லாஹ்’, தவறை எண்ணி வருந்தும்போது ‘அஸ்தஹ்பிருல்லாஹ்’, உறுதிமொழி எடுக்கும்போது ‘வல்லாஹ் பில்லாஹ்’, தர்மம் செய்யும் நேரத்தில், ‘பீஸபீலில்லாஹ்’ என்கின்றனர்.

இதுபோலவே திருமணத்தின் போது ‘ஆமன்துபில்லாஹ்’, விடைபெறும் போது ‘ஃபீஅமானில்லாஹ்’, பிரச்னை காலத்தில், ‘தவக்கல்து அலல்லாஹ்’, விரும்பியது நடந்தால் ‘ஃபதபாரகல்லாஹ்’, விரும்பாதது நடந்தால் ‘நஊதுபில்லாஹ்’, பிரார்த்தனையில் ‘ஆமீன் யாரப்பல் ஆலமீன்’, துக்கச் செய்தி கேட்டால், ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’. இப்படி, ஆண்டனை முன்னிறுத்தி, ஒவ்வொரு செயலின்போது வாழ்வியலோடு இணைந்து வார்த்தைகளாக இஸ்லாமியரின் வாயிலிருந்து வந்து விழுகின்றன.

இமைப்பிரியன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்