SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறு தூதுத்துவப் பணிகள்

2018-06-14@ 15:31:24

மனித குலத்திற்கு இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம் அவர்கள். அவருடைய வருகையின் நோக்கத்தையும் அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்தும்அதாவது தூதுத்துவப் பணிகள் குறித்தும் குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. திருக்குர்ஆனின் ஏழாம் அத்தியாயம் ‘அல்அஃராஃப்’  அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 157ம் வசனம் மிக முக்கியமானது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கத்தை இந்த வசனம் விவரிக்கிறது. முதன்மையான ஆறு கடமைகளைச் செய்யவே அண்ணல் நபிகளார் அனுப்பப்பட்டார்கள்.

அந்த ஆறு கடமைகள்...

1.  இவர்(நபிகளார்) நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறார்.
2. தீமைகளிலிருந்து மக்களைத் தடுக்கிறார்.
3. தூய்மையானவற்றை அனுமதிக்கிறார்.
4.தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கிறார்.
5. மக்களின் மீதுள்ள சுமையை இறக்குகிறார்.
6. மக்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்தெறிகிறார். (பார்க்க: குர்ஆன் 7:157) நபிகளார் உடைத்தெறிந்த விலங்குகள் என்ன? எல்லாவிதமான அடிமைத் தளைகளையும் உடைத்தெறிந்தார். எல்லாவிதமான சுரண்டல்களையும் தகர்த்தெறிந்தார். போலிக் கடவுள் சுரண்டல், சாதிச் சுரண்டல், மதச் சுரண்டல், ஆன்மிகச் சுரண்டல், பெண் சுரண்டல், பொருளாதாரச் சுரண்டல், சடங்குச் சுரண்டல்... என மனிதனின் கழுத்தில் மதத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும் சமூகத்தின் பெயரிலும் என்னென்ன விலங்குகள் இருந்தனவோ அனைத்தையும் தகர்த்தெறிந்தார். இந்த உலகில், மனித விடுதலையை
முதலில் பிரகடனம் செய்தவர் அண்ணல் நபி அவர்கள்தாம்..! நபிகளாரின் ஆறு கடமைகளைப் பட்டியலிட்ட அந்த வசனம் பின்வருமாறு நிறைவு பெறுகிறது: “எனவே, எவர்கள் இந்த நபி மீது நம்பிக்கை கொண்டு, இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கி அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவர்.”

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்