SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகாசி அமாவாசையையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு மகா அபிஷேகம்

2018-06-14@ 14:34:51

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வைகாசி அமாவாசையையொட்டி சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசை தினத்தன்று, கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, வைகாசி அமாவாசை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதன்படி, சுவாமிக்கு, மூலிகை பொடிகள், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை  சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்