SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சுழி அருகே சலுக்குவார்பட்டியில் காளியம்மன் கோயில் விழா

2018-06-14@ 14:34:00

திருச்சுழி: திருச்சுழி அருகே உள்ள சலுக்குவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருச்சுழி அருகே உள்ள சலுக்குவார்பட்டி கிராமத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் காளியம்மன் கோயில் திருவிழா துவங்கியது. அன்றைய தினத்திலிருந்து தினந்தோறும் காளியம்மனுக்கு காலையிலும், மாலையிலும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வந்தன. ஜூன் 6ம் தேதி விநாயகர் கோயிலுக்கும், அதற்கு மறுநாள் பெருமாள் கோயிலுக்கும் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம், இருக்கன்குடி, திருச்செந்தூர் மற்றும் கிராமத்தின் அருகே உள்ள காட்டாற்று பகுதியிலிருந்து புனித நீர் எடுத்து வானவேடிக்கையுடன் வீதி உலாவாக வந்து ஸ்ரீ காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு, தீச்சட்டி, சக்தி கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
நேற்று காலையில் அம்மனுக்கு 100க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நள்ளிரவில் ஆயிரங்கண் பானை, உடலில் அலகு குத்தும் நிகழ்ச்சியும், கிராமத்தில் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளுக்கும் கோழிகளை பலியிட்டனர். இறுதி நாள் நிகழ்ச்சியாக நேற்று விநாயகர் கோயிலிலிருந்து பக்தர்கள் உடல் முழுவதும் சேரும், சகதியும் பூசி தங்களது நேர்த்தி கடன்களை காளியம்மனுக்கு செலுத்தினர். மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்