SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

2018-06-14@ 14:33:34

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த மாசாணியம்மன் கோயிலில்  நேற்று, அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், முக்கிய விஷேச நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்நிலையில் அமாவாசை  தினமான  நேற்று மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலையில் கோயில் வளாகம் முழுவதிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாசாணியம்மன் கோயிலுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அதே போல், பொள்ளாச்சி நகர் கடைவீதியில் உள்ள மாரியம்மன்கோயிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில், ஊத்துக்காடுரோடு பத்ரகாளியம்மன்கோயில், நல்லூர் மாகாளியம்மன்கோயில், கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்