SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்தோணியார் தேவாலய ஆண்டு பெருவிழா தேர் பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

2018-06-14@ 14:32:00

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த விருதுவிளங்கினான் புனித அந்தோணியார் தேவாலய ஆண்டுப் பெருவிழா மற்றும் தேர் பவனி நேற்று விமரிசையாக நடந்தது. அதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அடுத்த விருதுவிளங்கினான் கிராமத்தில் அமைந்துள்ள கோடியற்புதர் காட்டுக்கோயில் புனித அந்தோணியார் தேவாலயம் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆண்டுப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, புனித அந்தோணியார் தேவாலயத்தில் 42வது ஆண்டுப்பெருவிழா விமரிசையாக தொடங்கியது. பங்குத்தந்தை டாக்டர் எஸ்.டேனியல் முன்னிலையில், முன்னாள் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, வேலூர் மறை மாவட்ட முதன்மை குரு ஐ.ஜான்ராபர்ட் ஆகியோர், கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த ஆண்டு புதியதாக, விருதுவிளங்கினான் அந்தோணியார் தேவாலயத்தில் 80 அடி உயர கொடிமரமும், காட்டுக்கோயிலில் 62 அடி உயர கொடிமரமும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, கடந்த 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினமும் நவநாள் திருப்பலி, கூட்டுத் திருப்பலி ஆகியவை  நடைபெற்றது. நேற்று முன்தினம் மறைகோட்ட முதன்மை குரு கே.எஸ்.ஞானஜோதி முன்னிலையில் நற்கருணை பெருவிழா நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் நிறைவாக அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று 42வது ஆண்டுப் பெருவிழா விமரிசையாக  நடந்தது. அதையொட்டி, திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள காட்டுக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு அந்தோணியார் தேர்பவனி தொடங்கி, விருதுவிளங்கினான் கிராமத்தில் காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், மாலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதில், வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்திரராஜூ கலந்துகொண்டார். நேற்று இரவு ஐந்து தேர்கள் முக்கிய வீதிகளில் பவனி வந்தது. விழாவில், திருத்தல அதிபர் தந்தை எஸ்.டேனியல், உதவி பங்குத் தந்தை ஏசுதுரை, தாளாளர் சார்லஸ் ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விழாவில், இசை கச்சேரி, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்