SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபாவை நினைப்பதும், அவருடைய நாமத்தை சொல்வதும் நன்மையே!

2018-06-14@ 09:48:10

எவ்வளவுக்கு எவ்வளவு பாபாவின் மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத் தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது. நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவராலும் தவிர்க்க முடியாது. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான்.

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன் என பாபா கூறுகிறார். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்