SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் பக்தர்கள் திரண்டு தரிசனம்

2018-06-13@ 14:56:57

திருப்பதி: திருப்பதியில் உள்ள தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் 4வது செவ்வாய்க்கிழமையையொட்டி பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மேலும், தீச்சட்டி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருப்பதியில் உள்ள தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் கடந்த மாதம் 8ம் தேதி சாட்டிப்பு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி 15ம் தேதி விஸ்வரூப தரிசனத்துடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து திருவிழா காலத்தில் வழிபாடு செய்ய முடியாத பக்தர்கள் திருவிழா முடிந்த நாளில் இருந்து 5 செவ்வாய் மற்றும் 5 வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி, 4வது செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று காலை தாதையகுண்டா கங்கையம்மனுக்க சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தங்க முகம் பொருத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், தீச்சட்டி சுமந்தும் ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக கோயில் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்