SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பர் கோயிலில் வருடாபிஷேக விழா : பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

2018-06-13@ 14:56:27

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கருப்பூர் மேகாட்டுக் கருப்பர் பொன்னடைக்கன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வழிபட்டனர். திருப்புத்தூர் அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் உள்ள மேகாட்டு கருப்பர் பொன்னடைக்கன் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதயொட்டி வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு கிராமத்தார்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.

பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணியளவில் 108 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இவ்விளக்குப் பூஜையில்  வேத மந்திரங்கள் முழங்க ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கிற்கு குங்குமம், பூக்கள், அட்சதை பூஜைகள் செய்தனர். பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கபட்டன. விழாவில் சுற்றுப்புறக் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்