SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவ நிறைவு விழா

2018-06-13@ 14:55:51

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவ விழா நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசித்தனர். பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வசந்த உற்சவ விழா தொடங்கி தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து, வசந்த உற்சவ நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை சுவாமி துயில் ஏழுபப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், மாலை உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தியுடன் சுவாமியை வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்