SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைத்தீஸ்வரன் கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு

2018-06-13@ 14:55:23

சீர்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு நடந்தது. நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகையையொட்டி செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமியுடன் பஞ்சமூர்த்தி சுவாமிகள் கிருத்திகை மண்டபம் எழுந்தருளினார். இதைதொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நவரத்தின அங்கி அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதினம் இளையசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தசுவாமி, திருப்பனந்தாள் காசி மட அதிபர் எஜமான் சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்