SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரளப்பெருஞ்செல்வி வைகுண்டபதி கோயிலில் தர்மகாட்சி திருவிழா

2018-06-13@ 14:54:16

நெல்லை: நெல்லை அருகேயுள்ள வீரளப்பெருஞ்செல்வி வைகுண்ட நாராயணர் அய்யாபதி கோயிலில் தர்மகாட்சி திருவிழா விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். வீரளப்பெருஞ்செல்வியில் உள்ள வைகுண்ட நாராயணர் அய்யாபதி கோயிலில் ஆண்டுதோறும் தர்மகாட்சி திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் ஏடு வாசித்தல், உச்சிக்கால பணிவிடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் சிகரமான தர்மகாட்சி வைபவம் 10ம் தேதி நடந்தது. இதையொட்டி 9ம் தேதி இரவு ராமாயணம் முற்றிலும் வாசிக்கப்பட்டது. 10ம் தேதி காலை 7 மணிக்கு சாமிதோப்பு தலைமைப் பதியில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

அய்யாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நண்பகலில் உச்சிக்கால பணிவிடையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சந்தனகுடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 10 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார வீதியுலா நடந்தது. இதையொட்டி அய்யாபதி தர்மகர்த்தா முத்துக்குட்டி பாண்டியன்,  முன்னீர்பள்ளம் அற்புதசாமி, பச்சைமால் ராஜா, பாலசுப்பிரமணியன் என்ற புலிக்குட்டி, கிருஷ்ணன், சிவன் பாண்டியன், தம்பான். இசக்கிமுத்து, சிவா, வீரபுத்திரன், கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்னதான ஏற்பாடுகளை புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுட்டி பாண்டியன், துணைத் தலைவர் சிவன் பாண்டியன், காவல் துறை உயர் அதிகாரி அரிராமன், தொழிலதிபர் கொம்பையா பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை வீரளப்பெருஞ்செல்வி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்