SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா : 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

2018-06-13@ 14:53:48

திருவாரூர்: திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் வைகாசி பெருவிழாவையொட்டி நடைபெற்ற தீமிதி விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் காதிதக்கார தெருவில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா  சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள், அபிேஷக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இதனையொட்டி கோயிலிலிருந்து அம்பாள் அன்னவாகனத்தில் எழுந்தருளினார். அப்போது கரகத்துடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதையடுத்து கடந்த 10 தினங்களாக மாலை அணிவித்து விரதம் இருந்து வந்த 500க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்ததாக நேற்று அதிகாலையில் அக்னி கப்பரை மற்றும் புஷ்பபல்லக்கு நடைபெற்ற நிலையில், இன்று (13ம் தேதி) ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் ராஜேந்திரன், அலுவலர் சிவபுண்ணியம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்