SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

2018-06-13@ 14:53:09

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும் நடக்கும். ஆனி மாதத்தில் நடக்கும் ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் கோயில் கொடி மரம் அருகே எழுந்தருளினார்கள். பின்னர் 7 மணிக்கு மேல் மேளதாளம் முழங்க கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. உத்சவ ஆச்சார்யர் சந்திரசேகர தீட்சிதர் கொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை நடந்தது. கோயிலில் திரண்டிருந்த ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சமூர்த்திகள் பிரகாரம் வலம் வந்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் வரும் 16ம்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 20ம்தேதி முக்கிய விழாவான தேர்த் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் தேரில் எழுந்தருள்கின்றனர். இதனை தொடர்ந்து தனி தனி தேர்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவாகமசுந்தரி, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 21ம்தேதி அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜருக்கு மகாபிஷேகமும் மதியம் 2மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. 22ம்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் நடேஸ்வர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள்  செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்