SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மன்குறிச்சி மாரியம்மனுக்கு பொங்கல் விழா

2018-06-12@ 14:27:04

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள  அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயிலில் வைகாசித்திருவிழா  கடந்த மாதம் 27ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதன் பின்னர் சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டு தினசரி மண்டகப்படி நடைபெற்றது. விழாவின் முக்கிய விழாவான பொங்கல் விழா நேற்று (11ம் தேதி) நடந்தது. கோயில் முன்பு பொங்கல் வைத்து கோழி, கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர். இதில்  அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, அம்மாபட்டி, ஆலவயல் ஆவிங்கோன்பட்டி, கருமங்காடு, கண்டியாநத்தம், கங்காணிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளைச்சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகவதி அம்மனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம்: இலுப்பூர் அருகே இருக்குமணிப்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த கடந்த மாதம் 28ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழச்சியான திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி விரதமிருந்த பக்தர்கள் அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம், முளைப்பாரி, கரும்பு தொட்டில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி கலை நிகழச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்