SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூரில் தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்த்திருவிழா

2018-06-12@ 14:24:06

ஓசூர்: ஓசூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் இல்ல பொருளாளர் அதிரூபன் நோலாஸ் கொடியேற்றி வைத்தார். 3ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் சிறப்பு நவநாள் திருப்பலி மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

காலை 8.30 மணிக்கு பெங்களுரு புனித சவேரியார் பேராலய பங்கு தந்தை அருட்பணி ஏ.எஸ். அந்தோணிசாமி தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு திருத்தேர்பவனி தொடங்கியது. இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய இருதய ஆண்டவர் எழுந்தரளினார். பக்தர்களுக்கு அருள் பாலித்தப்படி நகர வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டு வழிபட்டனர். தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குதந்தை எம்.சூசை, ஓசூர் டிவைன்நகர் பங்குதந்தை என்.எஸ் இருதயம், உதவி பங்குதந்தை பால்ஆரோக்கியதாஸ் மற்றும் ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தூய இருதய ஆண்டவர் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்